‘அஜித்-57’ பற்றிய அறிவிப்பு? ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தயாரிப்பு நிறுவனம்

ajith-storyவீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்-சிவா கூட்டணி இணைகிறது. அஜித்தின் 57வது படமாக உருவாக உள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாய் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் அஜித் ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒருவர் அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் அஜித்தின் 57 வது படம் பற்றிய அறிவிப்பை சத்யஜோதி பிலிம்ஸ், நேற்று மாலை வெளியிடுவதாக காலையில் அறிவிந்திருந்தது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்தனர். மேலும் டுவிட்டரில் அஜித்-57 பற்றிய அறிவிப்பை டிரெண்ட்டிங் செய்து வந்தனர். அதோடு, மாலை வரை படம் பற்றிய அறிவிப்பை அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்களை தயாரிப்பு நிறுவனம் ஏமாற்றியதோடு, அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது.

இதுகுறித்து சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் கூறியிருப்பதாவது… ”அஜித் படம் பற்றிய தகவல்களை வெளியிட முடியவில்லை. ரசிகர்களைக் காக்க வைத்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.