ஆன்ராயிடு போனில் இருந்து அழிந்த பைல்-களை அடுத்த நொடியே மீட்டெடுப்பது எப்படி?

ஸ்மார்ட் போன் களை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு இருக்கு ஒரு பொதுவான பிரச்சினை, தமது போனில் இருந்து தவறுதலாக அழிந்து போன பைல்-களை எப்படி மீட்டெடுத்து கொள்வது என்பதாகும். எமது போனில் இருந்து குறிப்பிட்ட சில பைல்-கள் அழிந்தால் அவற்றை மீட்டெடுக்கும் வல்லைமை கொண்ட ஒரு சில ஆன்ராயிடு செயலிகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலான செயலிகளை நாம் பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டியதை உள்ளது.

ஆனால், வருமுன் காப்பது என்றுமே சிறந்தது என்று கூறுவதற்கு அமைய இன்றைய பதிவில் உங்களது ஆன்ராயிடு போனில் இருக்கும் பைல்கள் தவறுதால அழிந்து விட்டால் அதை போனில் இருக்கும் ‘ரீசைக்கிள் பின்’-ஐ பயன்படுத்தி எப்படி மிக இலகுவாக அடுத்த நொடியே மீட்டெடுத்து கொள்வது என்று பார்ப்போம்.

ஆகவே விண்டோஸ் கணனிகளில் காணப்படும் ரீசைக்கிள் பின்-ஐ போலவே
இந்த உபாயமும் உங்களது ஆன்ராயிடு போனில் தொழிற்படும். எம் அனைவருக்குமே தெரிந்தது போல், நாம் எமது கணனியில் இருந்து ஏதாவது குறிப்பிட்ட ஒரு பைல்-ஐ அழித்து விட்டால், அது ரீசைக்கிள் பின்-இல் தற்காலிகமாக தங்கி இருக்கும். குறிப்பிட்ட அந்த பைல் எமக்கு தேவையென்றால் ரீசைக்கிள் பின்-இல் சென்று மறுபடியும் மீட்டெடுத்து கொள்ள முடியும்.

அதே உபாயத்தை தான், இன்று நாம் எமது ஆன்ராயிடு போனிலும் செயற்படுத்த போகிறோம்.

முதலாவதாக கீலே தரப்பட்டிருக்கும் ஆன்ராயிடு சைக்கிள் பின் செயலியை உங்களது போனுக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.

அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து போனில் இருந்து அழிக்கப்படும் எந்த வகையான பைல்-கள் இந்த செயலியில் தங்க வேண்டும் என்பதை செட்டிங்க்ஸ்-இற்கு சென்று தெரிவு செய்து கொள்ள முடியும்.

அத்தோடு நீங்கள் உங்களது போனில் இருந்து அழிக்கும் பைல்-கள் எவ்வளவு காலம் இந்த செயலில் தங்கி இருக்க வேண்டும் என்பதை கூட தெரிவு செய்து கொள்ள முடியும்.

ஆகவே இந்த பயனுள்ள செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிட்கு சென்றால் இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் குறிப்பிட்ட அளவான வசதிகள் மட்டுமே எமக்கு கிடைக்கும். ஆகவே இந்த செயலியின் பணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை எப்படி எமது போனுக்கு இலவசமாக தரவிறக்க