ஆற்றுமணல ≠ தாது மணல் ஒரு சிறப்பு பார்வை

ஆற்று மணலுக்கும் தாது மணலுக்கும் உள்ள வேறுபாடுகள் ….

ஆற்று மணல் என்பது ஆண்டிற்கு ஒரு முறை தான் நிறையும் வாய்ப்பு இருக்கிறது , அது பருவ மழைக்காலத்தில் தான் ஆற்றுப் படுகைகளில் மணலை நிரப்பிடும் . அது வரை அந்த பள்ளம் அப்படியே இருக்கும் . இதனால் நிலத்தடி நீர் குறைந்திடும் .

தாது மணல் என்பது கடலோரப் பகுதியில் மட்டுமே கிடைக்கிறது . அது நிலத்தடி நீரின் தன்மையையோ , அளவையோ பாதிக்காது , அதன் அள்ளலும் சில அடிகள் தான் இருந்திடும் . மேலும் கடலிலிருந்து வெளியேற்றப் படும் பொருளாக அது அமைவதால் , மூன்று மாதங்களிலேயே மீண்டும் நிரம்பிடும் .

ஆற்று மணல் என்பதை அள்ள , அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதியே போதுமானது . தாது மணலை பொறுத்த மட்டில் , மத்திய மாநில அரசாங்கங்களின் 18 துறைகளுக்கும் மேலான அதிகாரிகளின் நேரடிப் பார்வையில் அது நடை பெரும் … அனுமதிகளும் இந்திய அணு சக்தி துறை முதற்கொண்டு பல்வேறு துறைகளிலிருந்து பெறப் பட்டு தான் நடை பெரும் ….