உங்களது முகத்தில் ஏற்படும் பருத்தொல்லையை நீக்க இதோ…

image
சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால் தோன்றிய தழும்புகள் குறையும்.
கறிவேப்பிலை,வெண்ணெய் இரண்டையும் சங்கு கொண்டு அரைத்து முகத்தில் தடவி குளித்து வர முகப்பரு குறையும்.
சின்ன வெங்காயத்தை எடுத்து பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்.
சிறுதேள் கொடுக்கு இலையை அரைத்து ப‌ற்றுப்போட முக‌ப்ப‌ரு குறையும்.
வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து போட முகப்பரு குறையும்.
சீரகத்தை எருமைப்பால் விட்டு மைய அரைத்து தடவ முகப்பரு மறையும்.
சிறுகீரையுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவ முகப்பரு குறையும்.
மஞ்சள், சந்தனம், வாகை, புளியாரைச்செடி ஆகியவற்றை அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் பரு குறையும்
மஞ்சள், சந்தனம், வாகை, புளியாரைச்செடி ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் அழுத்தி தடவி வர முகத்தில் உள்ள பரு குறையும்.
சுக்கை அரைத்து விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர முகப் பரு நீங்கி குணம் காணலாம்.

From:

உங்களது முகத்தில் ஏற்படும் பருத்தொல்லையை நீக்க இதோ…