ஐ.ஏ.எஸ் அதிகாரி மர்ம மரணம் : வழக்கை விசாரிக்க சி.பி.ஐ மறுப்பு

கர்நாடகதில் நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவியின் மரணம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

நேர்மையாக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி கடந்த மாதம் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணம் அடைந்தார்.

இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், எதிர்க்கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வந்தாலும், கர்நாடக அரசு பிடிவாதமாக இருந்து வந்தது.

போராட்டம் வலுத்ததால், திடீரென சி.பி.ஐ விசாரணைக்கு ஒப்புக் கொண்டது.

ஆனால், கர்நாடக மாநில அரசு குறிப்பிட்ட காலத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக் வேண்டும் என்று வைத்துள்ள நிபந்தனையை ஏற்க சி.பி.ஐ தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஒரு வழக்கை இந்த காலத்துக்குள் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட எந்த சட்டத்திலும் இடமில்லை என்று சி.பி.ஐ பதிலளித்துள்ளது.