சரத்குமாருக்கு முன்வரிசை.. எதிர்க்கட்சிக்கு கூட்டத்தோடு கூட்டமா? : கருணாநிதி

தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று பதவியேற்றுக் கொண்டார். இவ்விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் அளிக்கப்பட்டதற்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த சரத்குமாருக்கு முன்வரிசையில் இடம் அளித்து, பிரதான எதிர்க்கட்சியான மு.க. ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,

சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழாவில், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு – அதே தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு – அமர வைத்து வேண்டுமென்றே திராவிட முன்னேற்றக் கழகத்தை திட்டமிட்டு அவமானப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.