டெபிட், கிரெடிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்துக்…

image

டெல்லி: டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. கவனக்குறைவாக இருந்துவிட்டு அதன் பிறகு பணம் போச்சே என்று புலம்புவதில் புண்ணியம் இல்லை.
டெல்லியில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் மேனேஜர் கிரி்ஷ் நரங். தினமும் ரெஸ்டாரன்ட்டில் பணபரிவர்த்தனை பார்க்கும் தன்னுடைய டெபிட் கார்டு மூலம் ஏமாந்து போவார் என்பதை அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அவருக்கு திடீர் என்று ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.20,000 செலவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஏடிஎம் மையத்திற்கு சென்ற அவர் தனது டெபிட் கார்டை அங்கேயே மறந்து வைத்துவிட்டு வந்தது அப்போது தான் அவருக்கு தெரிந்தது.
அந்த கார்டை எடுத்த நபர் அருகில் உள்ள கடைக்கு சென்று ரூ.20,000க்கு பொருட்கள் வாங்கியுள்ளார். உடனே அவர் வங்கியைத் தொடர்பு கொண்டு கார்டை பிளாக் செய்துவிட்டார். இருப்பினும் போன பணம் போனது தான்.
இது போன்றவற்றை தடுக்க மத்திய ரிசர்வ் வங்கி பாதுகாப்பான 3டி பின்நம்பர் மற்றும் பாஸ்கோடுகளை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த 3பி டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பாதுகாப்புக்கு புதிய திட்டம் ஒன்றை பரிந்துரைத்துள்ளது. அதன்படி யாராவது கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால் வாடிக்கையாளருக்கு எஸ்.எம்.எஸ். வரும். அதில் நீங்கள் இவ்வளவு ருபாய்க்கு பொருட்கள் வாங்கியுள்ளீர்களா என்று கேட்கப்பட்டிருக்கும். அதற்கு வாடிக்கையாளர் ஆம் அல்லது இல்லை என்று பதில் அனுப்ப வேண்டும். ஆம் என்று பதில் அளித்தால் தான் சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும்.
ஆனால் இத்திட்டம் சாத்தியமில்லை என்று ப்ர்ஸ்ட் டேட்டா கார்பரேஷன் துணை தலைவர் அம்ரிஷ் ராவ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஏ.டி.எம். இயந்திரங்கள் துரிதமாக பணம் கொடுக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்களே தவிர பாதுகாப்பு பற்றி யாரும் கவலைப்படுவதி்ல்லை என்றார்.

More: 

டெபிட், கிரெடிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்துக்…