தொலைதூர பால்வீதி கண்டுபிடிப்பு ஆய்வில் முக்கியமானது என தகவல்

அதிக தொலைவில் உள்ள விண்மீன் மண்டல திரட்டை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது இருக்கும் பால்வீதியிலிருந்து 3 ஆயிரம் கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இது மிகப்பழமையானது என கருதப்படுகிறது.

 

இந்த மண்டலத்தை ஹப்பல் (Hubble) தொலைநோக்கியின் உதவியுடன் கண்டுபிடித்தனர். அதன் நிறத்தை கொண்டு அந்த தூரத்தை கணக்கிட்டதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட திரட்டுகளில் இதுவே அதிக தொலைவில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

 

அதிலிருந்து வரும் வாயுவும், தூசும் மிக வேகமாக புதிய நட்சத்திரங்களை உருவாக்கி வருவதை கண்டு வியந்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் நாசா (NASA)-வின் ஜேம்ஸ் வெப் (James Webb) தொலைநோக்கி நிறுவப்பட்டவுடன் இன்னும் தொலைதூரத்தில் உள்ள இது போன்ற மண்டலங்கள் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது