மருந்து பரிசோதனை அனுமதியை மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

நடப்பாண்டில் ஜுலை 3-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 157 மருந்து பரிசோதனைகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மறுஆய்வு செய்யுமாறு மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறிப்பிட்ட காலத்தில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம், மருந்து சோதனைகளுக்கு அனுமதி அளித்த போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் இம்மறுஆய்வுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்தியாவில் நடக்கும் மருந்து சோதனைகள் நம் நாட்டு மக்களுக்கு கட்டாயம் நன்மை தருவதாக இருக்க வேண்டும் என கூறிய உச்சநீதிமன்றம், பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு பலன் கிடைக்கிறதா என்பதைப்பற்றிய கவலை நமக்கு தேவையில்லை என்றும் கூறியிருந்தது.