ரூ.3,999க்கு 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!!

x3-27-1464334251.jpg.pagespeed.ic.cotw3zXyhu[1]ஃபிளேம் 1 மற்றும் ஃபிளேம் 2 கருவிகளை தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் லைஃப் பிரான்டின் கீழ் ஃபிளேம் 3 என்ற கருவியை ஆன்லைனில் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் ரூ.3,999க்கு இந்த கருவியின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹோம்ஷாப்18 என்ற இணையதளத்தில் விற்பனை செய்யப்படும் இந்த கருவியின் சிறப்பம்சங்கள் ஸ்லைடர்களில்..

திரை 
4 இன்ச் WVGA டிஸ்ப்ளே, 480*800 பிக்சல் ரெசல்யூஷன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 512 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி 
4 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை GPRS/EDGE, 3ஜி / 4ஜி, வை-பை, ப்ளூடூத் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கேமரா 
கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமரா, எச்டிஆர் மோடு மற்றும் 2 எம்பி செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு குறைந்த வேகத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதி, ஃபேஸ் டிடெக்ஷன், ஸ்மைல் கேப்ச்சர், வீடியோ பாப்-அப் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இயங்குதளம் 
சாம்பல் நிறம் கொண்ட ஃபிளேம் 3 கருவியுடன் இரண்டு ஆண்டு வாரண்டியும், ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் மூலம் இயங்குகின்றது.
பேட்டரி
இத்தகைய அம்சங்களுக்கு ஏற்ப 1700 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதன் மூலம் சுமார் 4.5 மணி நேர டாக்டைம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.