ஷிகர் தவண் மீது சவுரவ் கங்குலி அதிருப்தி!

ஷிகர் தவண் ரன்கள் குவித்து ஹைதராபாத் அணிக்கு உதவவேண்டும் என்று முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-வது தகுதிச்சுற்றில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது ஹைதராபாத்.

டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஷிகர் தவண் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அதேபோல முதல் தகுதிச் சுற்று ஆட்டத்திலும் அவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.