9 ஆண்டு கால ஐ.பி.எல் சாதனையை இழந்துள்ளார் ரெய்னா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ரெய்னா பங்கேற்காததால் 9 ஆண்டு கால ஐ.பி.எல். ஆட்டத்தில் அனைத்து போட்டிகளிலும் ஆடியவர் என்ற சாதனையை ரெய்னா இழந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொழில்முறை போட்டியான ஐ.பி.எல். லீக் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கி  நடைபெற்று வருகிறது. 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் முதல் நடப்பு தொடரில் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டி வரை குஜராத் லயன்ஸ் அணி கேப்டன் ரெய்னா தொடர்ந்து விளையாடி வந்தார். அனைத்து போட்டிகளிலும் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், குஜராத் – பெங்களூர் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் போட்டியில் ரெய்னா பங்கேற்கவில்லை. ரெய்னான் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் ரெய்னா ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்காமல் மனைவியை கவனித்துக் கொள்வதற்காக ஹாலந்து சென்றுள்ளார்.

இதன் மூலம் தனது 9 ஆண்டுகால ஐ.பி.எல். ஆட்டத்தில் அனைத்து போட்டிகளிலும் ஆடியவர் என்ற சாதனையை அவர் இழக்கிறார். சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்பும் வரை மெக்கல்லம் குஜராத் அணியின் கேப்டனாக இருப்பார்.